உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்துக்களுக்காக டிரம்ப் பேசிய அதிரடி அரசியல் Donald Trump on Hindus | Trump vs Kamala | US election

இந்துக்களுக்காக டிரம்ப் பேசிய அதிரடி அரசியல் Donald Trump on Hindus | Trump vs Kamala | US election

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி விட்டது. 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் உள்ளனர். அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் ஓட்டு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என்பதால் ஒரு விதத்தில் தங்களுக்கு இந்திய வம்சாவளியினர் ஓட்டு கிடைக்கும் என்று ஜனநாயக கட்சி நம்புகிறது. ஆனால் இந்திய வம்சாவளியினர் ஓட்டுகளை வேட்டையாடுவதில் டிரம்ப் முதலில் இருந்தே தீவிரம் காட்டி வருகிறார். தீபாவளியையொட்டி அவர் வாழ்த்து தெரிவித்த விதம் அமெரிக்க தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்துக்களுக்கு ஆதரவாக டிரம்ப் பேசிய ஆழமான கருத்துகளுக்கு உலகம் முழுதும் உள்ள இந்துக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை