தேர்தல் கமிஷனிடம் சொல்வோம்: ராகுல் Haryana election | Rahul | EVM | election commission
ஹரியானா தேர்தல் தோல்வி EVM மீது ராகுலுக்கும் சந்தேகம்? ஹரியானா சட்டசபை தேர்தல் தோல்வியால் அமைதியாக இருந்த ராகுல், தேர்தல் முடிவு பற்றி வாய் திறந்து இருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் வெற்றி தந்த மக்களுக்கு நன்றி. இது அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி என தெரிவித்துள்ளார். ஹரியானாவில் வந்த எதிர்பாராத தேர்தல் முடிவுகள் பற்றி பகுப்பாய்வு செய்வோம். பல சட்டசபை தொகுதிகளில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அது பற்றி தேர்தல் கமிஷனிடம் தெரிவிப்போம். ஹரியானவில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. அவர்களின் உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார நீதி, உண்மைக்காக இந்த போராட்டத்தை தொடர்வோம் என்று ராகுல் கூறியுள்ளார். முன்னதாக, ஹரியானாவில் இந்த முறை காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சொல்லியிருந்தன.