பாஜ உறுப்பினரானார் கஸ்தூரி; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Actress Kasthuri | TNBJP | Nainar
பாஜவில் அரசியல் பயணத்தை துவக்கினார் நடிகை கஸ்தூரி! ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. 51 வயதான கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தனது குரலை பதிவு செய்து வந்தார். இந்த சூழலில் இன்று சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், கஸ்தூரி பாஜவில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவக்கி உள்ளார். அவருடன் பிக்பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமீதா மாரிமுத்துவும் பாஜவில் சேர்ந்துள்ளார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.