உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய ராணுவ தளங்களை காத்த அதானி ட்ரோன் பாதுகாப்பு கவசங்கள் | Adani Defence illionaire Gautam Adani

இந்திய ராணுவ தளங்களை காத்த அதானி ட்ரோன் பாதுகாப்பு கவசங்கள் | Adani Defence illionaire Gautam Adani

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய படைகள், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து, 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது. அதைத்தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாள் சண்டை நடந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அதானி டிஃபென்ஸ் நிறுவனம் தயாரித்த ராணுவ தளவாடங்கள் முக்கிய பங்கு வகித்தன என அதானி குரூப் நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி பெருமிதத்துடன் கூறினார். ஆமாதாபாத்தில் நடந்த அதானி குரூப் நிறுவனங்களின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அதானி டிபென்ஸ் தயாரித்த ட்ரோன்கள், இந்தியாவின் கண்களாகவும், போர் வாளாகவும் செயல்பட்டு எதிரிகளின் இலக்குகளை அழித்தன. அதுமட்டுமல்லாமல், எங்கள் நிறுவனம் தயாரித்த ட்ரோன் பாதுகாப்பு கவச அமைப்புகள், இந்திய ராணுவ நிலைகளையும், நாட்டு மக்களையும் எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்தன எனவும் அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின்போது துணிச்சல்மிக்க நமது ராணுவ வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு உயர்ந்து நின்றனர்; அவர்களுக்கு எங்கள் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்;. அமைதி எவ்வளவு மதிப்புமிக்கது என்பது இந்தியாவுக்கு தெரியும்; இந்தியாவை ஒருவர் அச்சுறுத்த முயன்றால், அவர்களுக்கு அவர்களது பாணியிலேயே எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பது இந்திய ராணுவத்துக்கு நன்றாகவே தெரியும். எனவே, அமைதி என்பது சும்மா கிடைக்காது; கஷ்டப்பட்டால்தான் அதை பெற முடியும் எனவும் அதானி கூறினார்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை