/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுக கூட்டத்துக்கு வந்தவர்கள் நாற்காலியை தூக்கி சென்றனர் | ADMK | Coimbatore
அதிமுக கூட்டத்துக்கு வந்தவர்கள் நாற்காலியை தூக்கி சென்றனர் | ADMK | Coimbatore
கோவை, சிங்காநல்லூரில் ரொட்டிக்கடை மைதானத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்கள் சேர்க்கும் யுத்தியாக, கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டனர். கூட்டத்திற்கு வருபவர்கள், நிகழ்ச்சி முடிந்து போகும்போது, அவர்கள் உட்கார்ந்திருக்கும் பிளாஸ்டிக் நாற்காலியை வீட்டுக்கு எடுத்து செல்லலாம் என அறிவித்தனர். இது நல்ல ஆஃபராக இருக்கிறதே என ஆண்கள், பெண்கள் போட்டிபோடாத குறையாக கூட்டத்துக்கு வந்து நாற்காலிகளை பிடித்து உட்கார்ந்தனர்.
ஜன 24, 2025