அனைத்து இந்திய மொழிகளை நேசிப்போம்: அமித் ஷா பேச்சு Amit Shah on Hindi Language| Official Language
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டும் அல்ல. அது தேசத்தின் உயிர் நாடி. மொழிகளை போற்றி பாதுகாப்பதின் மூலம், நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை முன்னெடுக்கலாம். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த ஒரு வெளிநாட்டு மொழியையும் வெறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், நம் சொந்த மொழி மீதான விருப்பம் கவுரவத்தையும் மறக்கக் கூடாது. அனைத்து மாநில அரசுகளும் தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொறியியல், மருத்துவ படிப்புகளை மாநில மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டில் 11 செம்மொழிகள் இருப்பதுபோல், வேறெந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. ஹிந்தி மொழி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரி அல்ல. அது அனைத்து இந்திய மொழிகளின் தோழி. அனைத்து இந்திய மொழிகளையும் நேசிப்போம்; பாதுகாப்போம் என அமித் ஷா பேசினார்.