ஆண்டுக்கு ₹10000 கோடி வட்டி கட்டும் மின்வாரியம் | Anbumani | Senthil Balaji | Electricity
மின் கட்டணத்தை ஏற்றியும் நஷ்டம் மின்வாரிய கடன் ₹1.62 லட்சம் கோடி 1 லட்சத்துக்கு 62 ஆயிரம் கோடி இழப்புடன் தமிழக மின் வாரியம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அதில் நிலவும் ஊழல்கள், முறைகேடுகளை தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் 6.47 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கின்றன. அதில் தமிழக மின் வாரியத்தின் இழப்பு மட்டும் 25 சதவிகிதம் என கூறப்படுகிறது. தமிழக மின் வாரியத்தை இந்தியாவின் முதன்மை மின்வாரியமாக மாற்ற போவதாகக் கூறியவர்கள், இழப்பை சந்திப்பதில் முதல் நிறுவனமாக உயர்த்திருப்பது அவமானகரமான சாதனை. 2015-16ஆம் ஆண்டில் 63,162 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் இழப்பு 2022-23ஆம் ஆண்டில் 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு 1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை.