முதலீடு வருவதாக சொல்வதெல்லாம் வெறும் மாயை தானா? | Anbumani | PMK President | Question to CM Stalin
தொழில் தொடங்க வழி இல்ல முதலீடு மட்டும் குவியுதா? பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை 3வது இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க ஏற்ற சூழலை உருவாக்க 30 வகையான சீர்திருத்தங்கள் பரிந்துரையில் உள்ளது. அதில் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை சீர்திருத்தங்களை செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில் தான் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. கேரளா மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால், தமிழகம் ஒன்றை கூட செய்யாததால், சீர்திருத்தங்கள் செய்த 17 மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. தொழில் தொடங்க எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் என கூறப்படும் கேரளா சில ஆண்டுகளுக்கு முன் 28வது இடத்தில் இருந்தது. பிறகு 15வது இடத்திற்கு வந்த நிலையில் இப்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் அடுத்த 3 இடங்களை கைப்பற்றியுள்ளன. கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் இடம் கிடைக்காதது தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் முதலீடு குவிவதாக தமிழக அரசு சொல்வது அனைத்தும் மாயையாகவே தோன்றுகிறது.