உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செருப்பு வீசியவரை தொடர்ந்து சேறு வீசியவர்களை தேடும் போலீஸ் | annamalai | Bjp | mk stalin | dmk

செருப்பு வீசியவரை தொடர்ந்து சேறு வீசியவர்களை தேடும் போலீஸ் | annamalai | Bjp | mk stalin | dmk

பெஞ்சல் புயல் பாதிப்பின்போது, விழுப்புரத்தில் அசூர், இருவேல்பட்டு கிராம மக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக்கூறி மறியல் செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது சில சேற்றை வாரி வீசினர். இச்சம்பவம் தொடர்பாக, கிராம மக்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதனை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான பெண்ணை தேடி அலைந்தார்கள். இப்போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவர்களை தேடி அலைகிறார்கள். திமுக ஆட்சியில் இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ