தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி நிச்சயம் | Annamalai | TNBjp | 2026 Assembly Election
வெற்றிக்கு முதல் படி 2026ல் ஆட்சி உறுதி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; 2024 பார்லி தேர்தலில், தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத தேஜ கூட்டணி, மிகவும் பலமான சக்தியாக உருவெடுத்து உள்ளது. தமிழகத்தில் 78 சட்டசபை தொகுதிகளில் பாஜ இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது. இதுவே 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முதல் படி. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் என மக்கள் திமுக ஆட்சியின் மீது வெறுப்படைந்து உள்ளனர். திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். பாஜ மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. தேஜ கூட்டணி 18 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. பாஜ தனித்து 11 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது.