உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நேர்மையற்ற அரசியல் நடத்தி மக்களை ஏமாற்றும் திமுக | Annamalai bjp | CM Stalin | Minister Anbil Mahesh

நேர்மையற்ற அரசியல் நடத்தி மக்களை ஏமாற்றும் திமுக | Annamalai bjp | CM Stalin | Minister Anbil Mahesh

படிக்க தெரியுமா, தெரியாதா? மகேஷுக்கு அண்ணாமலை சூடு பொய் சொல்லி பிழைப்பு நடத்துவதா? தமிழகத்துக்கு எதிரான, மத்திய பா.ஜ அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. கல்வி திட்டங்களுக்காக தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 2152 கோடி ரூபாயை பறித்து வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஸ்டாலின் குற்றச்சாட்டை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்ந்தன. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, டில்லி ஆகியவை பங்கேற்கவில்லை. திட்டத்தில் சேரும்படி தமிழக அரசுக்கு பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டும் பதில் வரவில்லை என மத்திய கல்வி அமைச்சகம் விளக்கமளித்தது. இந்நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் தமிழகத்துக்குரிய 2401 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை என்றார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களுக்கு கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு 17,632 கோடி ரூபாயை வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் மகேஷ் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வித்துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்து தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. PMSHRI பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்த திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலை தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியலை செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது. எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்? என அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ