உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை கேள்வி | Annamalai Bjp | Thangam Thenarasu | Dmk | Mk Stalin Cm

தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை கேள்வி | Annamalai Bjp | Thangam Thenarasu | Dmk | Mk Stalin Cm

கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்கறீங்களா ? வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு 2021 தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய அப்போதை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக மாற்றிவிட்டது என்றார். இன்று தமிழகத்தின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். அப்படியானால் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். 2014ல் நாட்டின் கடன் 55.87 லட்சம் கோடி. 2025ல் மொத்த 181.74 லட்சம் கோடி ரூபாய். அப்படியானால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என கேட்டார். அதற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக. தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூட தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது. 2004 - 2014 வரையிலான 10 ஆண்டு, காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 - 2024 வரை, 10 ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக? உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என அண்ணாமலை கேட்டுள்ளார்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ