/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க பார்க்கிறார் ஸ்டாலின்! Annamalai| BJP| MK stalin
அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க பார்க்கிறார் ஸ்டாலின்! Annamalai| BJP| MK stalin
சென்னை பெரவள்ளூரில் வெள்ளிக்கிழமை பாஜ சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ தலைவர் கபிலன் பங்கேற்று பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக பெரவள்ளூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பெரவள்ளூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்த கபிலனை இன்று கைது செய்தனர். கபிலன் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆக 04, 2024