கட்சி பதவியை பறித்தால் மட்டும் மக்கள் மறந்துவிட மாட்டார்கள் | Annamalai | BJP | Ponmudi | M.K.Stalin
இதுதான் திமுகவின் அரசியல் தரம் பொன்முடியை கிழித்த அண்ணாமலை திமுக சிஸ்டமே இப்படித்தான் வனத்துறை அமைச்சர் பொன்முடி மேடை நிகழ்ச்சி ஒன்றில் மிக ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையிலும் உள்ள அவரது ஆபாச பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக எம்பி கனிமொழியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை பறித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஆனாலும் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பொன்முடியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், மக்கள் மறந்து சென்று விடுவார்கள் என்று திமுக தலைமை நினைப்பது தவறு என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதான் தமிழகத்தில் திமுகவின் அரசியல் பேச்சுக்களின் தரம். ஒரு காலத்தில் உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடி , இப்போது வனத்துறை அமைச்சராக இருக்கிறார். இதையெல்லாம் தமிழக இளைஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக சிஸ்டமும் இப்படித்தான் கொச்சையாக இருக்கிறது. இப்படி ஒரு அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலின், வெட்கி தலை குனிய வேண்டும். இந்து தர்மத்தின் தூண்கள் மீது இடைவிடாது திமுகவினர் நடத்தும் தாக்குதலுக்கு பதில் சொல்லாமல் போக முடியாது. எங்கள் மவுனத்தை முதல்வர் ஸ்டாலின் பலவீனமாக நினைக்க கூடாது என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.