உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகம் - புதுச்சேரி எல்லையில் நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு | Arrack shop issue | Puducherry

தமிழகம் - புதுச்சேரி எல்லையில் நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு | Arrack shop issue | Puducherry

தமிழக எல்லை பகுதியான புதுச்சேரி மடுகரையில் அரசு அனுமதி பெற்ற சாராயக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் புதுச்சேரி அரசு கலால் துறை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். பட்டாம்பாக்கம் மடுகரை சாலையில் உள்ள பெண்ணை ஆற்று பாலத்தில் புதுவை மது பாட்டில் கடத்தலை தடுக்க சோதனை சாவடி அமைத்து தமிழக போலீசார் சோதனை செய்கின்றனர். நேற்று அந்த வழியாக வந்த ஒருவர் 10 சாராயம் பொட்டலங்களை எடுத்துச் சென்றுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் மடுகரை சாராயக்கடையில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து பண்ருட்டி டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென மடுகரை சாராயக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை