உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டெல்லியை அதிர வைக்கும் அரசியல் மாற்றம் | Arvind Kejriwal | Delhi CM | AAP

டெல்லியை அதிர வைக்கும் அரசியல் மாற்றம் | Arvind Kejriwal | Delhi CM | AAP

கெஜ்ரிவால் வீட்டில் மீட்டிங்! டெல்லியின் அடுத்த CM யார்? முட்டி மோதும் 3 பேர்.. டிஸ்க்: டெல்லி அரசின் மது கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்தார். இவர் மீதான சிபிஐ வழக்கில் ஜாமின் கிடைத்து இப்போது வெளியே வந்துள்ளார். ஜாமினில் வெளியே சென்றாலும் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ போக கூடாது. துணை நிலை கவர்னர் ஒப்புதல் தேவைப்படாத ஆவணங்களில் கையெழுத்திட கூடாது என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோது கூட முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வராத அவர் திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பரபரப்பான சூழலில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் வீட்டில் அமைச்சர் அதிஷி , முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட ஆம்ஆத்மி நிர்வாகிகளுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கவர்னரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் கெஜ்ரிவால் தலைமையில் நடக்கிறது. இதில் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை