வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நோபல் பரிசுக்குண்டான மரியாதையே போயிடும் போல் தெரிகிறது?
கெஜ்ரிவால் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக பாஜ தலைவர்கள் கிண்டல்! | Arvind Kejriwal | Nobel Prize
நோபல் பரிசுக்கு தகுதியானவன் நான்! வாயை கொடுத்து வாங்கி கட்டும் கெஜ்ரிவால்! ஹரியானா மாநிலம் சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். டில்லியில் எனது தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மொஹல்லா கிளினிக்குகள் அமைத்து, மக்களுக்கு சுகாதார சேவை ஆற்றினோம். பள்ளிகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன. மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை திறம்பட கையாண்டோம். ஆட்சி, நிர்வாக விஷயங்களில் கவர்னர் தலையீட்டையும் தாண்டி, சிறப்பாக செயல்பட்டமைக்காக எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என, கெஜ்ரிவால் பேசினார். கெஜ்ரிவாலின் இந்த பேச்சை பாஜ தலைவர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். கெஜ்ரிவாலில் பேச்சு நகைப்புக்குரியது. டில்லியை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்காகவும், ஊழல் செய்ததற்காகவும் வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு தரலாம். ஊழல், சர்வாதிகாரம், நிர்வாக சீர்கேடு என பல விஷயங்களில் கெஜ்ரிவால் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என டில்லி மாநில பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா கூறினார். மொஹல்லா கிளினிக்குகளில் ஊழல், மதுபான ஊழல், யமுனை நதியை சுகாதாரமற்றதாக செய்தது, கண்ணாடி மாளிகை கட்டியது என பல அரிய காரியங்களை செய்தவர் கெஜ்ரிவால். அவரது மனநிலை தடுமாறியுள்ளது என நினைக்கிறேன். கெஜ்ரிவாலுக்கு நோபல் பரிசு தர வேண்டுமானால், அது மேற்கண்ட ஊழல்களுக்குத் தான் தர வேண்டும். கெஜ்ரிவால் தெளிவான மனநிலையில் தான் இருக்கிறாரா என சோதிக்க வேண்டும் என்று பாஜ பொதுச்செயலாளர் தருண் கூறி உள்ளார். கெஜ்ரிவாலின் நோபல் பரிசு பற்றிய பேச்சு டில்லி மட்டுமின்றி, நாடு முழுதும் அரசியல் தலைவர்கள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
நோபல் பரிசுக்குண்டான மரியாதையே போயிடும் போல் தெரிகிறது?