தூதரக அதிகாரிகளுக்கு கெடு விதித்த இந்தியா | Canada | Khalistan | Justin Trudeau
சீண்டி பார்க்கும் கனடா இந்தியா அதிரடி முடிவு இந்தியா - கனடா இடையிலான ராஜதந்திர உறவில் ஏற்பட்ட விரிசல் விரிவடைந்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு ஜூனில் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இச்சூழலில் ஹர்தீப் கொலையில் இந்திய தூதரக உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று நிராகரித்துள்ளது. மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக கனடா பிரதமர் ட்ரூடோ அரசு இதை செய்கிறது. அதிகாரி சஞ்சய் குமார் மூத்த தூதரக அதிகாரி. 36 ஆண்டுகளாக பணியில் இருக்கிறார். ஜப்பான் சூடான் இத்தாலி, துருக்கி வியட்நாம் சீனாவில் பணியாற்றி உள்ளார். அவர் மீது இதுபோன்ற குற்றம் சாட்டுவது அபத்தமானது அவரை அவமதிப்பதற்கு சமம். நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை மட்டுமே கனடா சொல்கிறது. அதற்கான ஆதாரங்களை எதுவும் வழங்கவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக கனடா அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவை குற்றம் சாட்டுகிறது.