உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ₹100 கோடி சொத்தின் கதி என்ன? நிர்வாகிகள் குமுறல் | Congress | INTUC

₹100 கோடி சொத்தின் கதி என்ன? நிர்வாகிகள் குமுறல் | Congress | INTUC

காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு INTUC. இதன் தமிழக தலைவராக ஜெகன்நாதனும், முதன்மை பொது செயலராக பன்னீர்செல்வமும் உள்ளனர். சென்னை, திருச்சி, சேலம் உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் INTUC அமைப்புக்கு 100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளது. சொத்துக்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும் என டில்லி காங்கிரஸ் மேலிடத்தில் தமிழக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த குழுவும் அமைக்கவில்லை. சொத்துக்களை நிர்வகிக்கும் மாவட்ட நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகளுடன் கூட்டணி அமைத்து சொத்துக்களை அபகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக INTUC நிர்வாகிகள் கோபிநாத், சேவியர் ஆதரவாளர்கள் சமீபத்தில் மோதிக் கொண்டனர்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை