பிரதமர் மோடியை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்! Modi ready to Space Mission | ISRO |Jairam Ramesh
இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமியில் தரையிறக்கும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கான பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செய்து வருகிறது. விண்வெளிக்கு செல்லவுள்ள வீரர்களை பிரதமர் மோடி சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். இத்திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி கூட விண்வெளிக்கு செல்ல முடியும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது நம் நாட்டிற்கு மிகப் பெருமையான தருணமாக அமையும் என்றும் அவர் கூறினார். இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி விண்வெளிக்கு செல்வதற்கு முன், நம் நாட்டில் உள்ள மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என அவர் கூறி உள்ளார். மணிப்பூரில் அரசியல் சாசனம் சுக்குநுாறாக உடைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. அந்த மாநில மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். தன்னை ஒரு அசாதாரண பிறவியாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, முதலில் மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். ----