உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லியின் முதல் தலித் மேயராக மகேஷ் கிஞ்சி தேர்வு! Dalit Mayor | Delhi Municipal Corporation | AAP W

டில்லியின் முதல் தலித் மேயராக மகேஷ் கிஞ்சி தேர்வு! Dalit Mayor | Delhi Municipal Corporation | AAP W

டில்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. 2022ல் மாநகராட்சி தேர்தல் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளைக் கைப்பற்றியது. பாஜ 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வென்றனர். மேயர் தேர்வு நடப்பதற்கு முன்பாக மாநகராட்சியின் நியமன கவுன்சிலர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மேயர் தேர்தல் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஆம் ஆத்மி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வானார். 2023 மேயர் தேர்தலிலும் அவரே வெற்றிபெற்று மேயர் ஆனார். இந்தாண்டு தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது. ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மாநகராட்சி மன்றத்தில் ஏற்பட்ட மோதல்களால் தேர்தல் மீண்டும் தள்ளி போனது. 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மேயர் தேர்தல் நடந்தது. டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டடத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட மகேஷ் கிஞ்சி 133 ஓட்டுகள் பெற்றார். அதில் இரண்டு வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் கிஷண் லால் 130 ஓட்டு பெற்றார். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மகேஷ் கிஞ்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை