உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாக்கிங் சென்ற எம்பிக்கு அதிர்ச்சி: செயினை பறித்துச்சென்ற ஆசாமிகள் | delhi parliament | Sudha

வாக்கிங் சென்ற எம்பிக்கு அதிர்ச்சி: செயினை பறித்துச்சென்ற ஆசாமிகள் | delhi parliament | Sudha

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இரு சபைகளின் எம்.பி.,க்களும் டில்லியில் தங்கி உள்ளனர். மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதாவுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை. அதனால் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இன்று காலை 6.30 மணியளவில் சாணக்யபுரி பகுதி சாலையில் சுதா நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். போலந்து தூதரகம் எதிரே வாக்கிங் சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 ஆசாமிகள் சுதாவை நெருங்கிவந்தனர். பைக்கில் பின்னால் இருந்த ஆசாமி சுதாவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் செயினை பறிக்க முயன்றான். சுதா செயினை விடாமல் அவர்களுடன் போராடினார். அவரை தாக்கி தள்ளி விட்டு செயினை மர்ம ஆசாமிகள் பைக்கில் தப்பிச் சென்றனர். இது குறித்து, டில்லி சாணக்யபுரி போலீசில் சுதா புகார் அளித்துள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராயும் போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். டில்லியில் எம்.பி.யிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் எம்பி சுதா புகார் கடிதம் அனுப்பியுள்ளார். டில்லியில் ரேகா குப்தா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. பொதுவாக போலீஸ் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். ஆனால், டில்லி போலீசோ, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. டில்லியின் மையப்பகுதியில் ஒரு எம்பிக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது என காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டியுள்ளன.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை