என்ன ஆகிறது சீமான் கட்சி? தமிழகம் முழுக்க சம்பவம் | DMK | NTK | Senthil balaji | Seeman
நாதகவை கூண்டோடு சரிக்க ஆபரேஷன் கோவை அசைன்மென்ட் முடித்த செந்தில் டிஸ்க்: நாம் தமிழர் கட்சியில் சிறப்பாக பேசக்கூடிய மேடை பேச்சாளர்கள், சமூக வலைதளங்களில் திறம்பட செயல்படும் நிர்வாகிகளை வளைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கோவை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளனர். அதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர். மற்ற மாவட்டத்தினர் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை துவக்கி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். அக்கட்சி ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் சீமான் அதிருப்தியினர் முழுக்க திமுக பக்கம் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாதகவில் இருந்து விலகி வந்த தமிழர் ஒருங்கிணைப்பு இயக்க நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். சீமான் மட்டுமே தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை என தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களை நம்ப வைத்து செயல்பட்டு கொண்டிருந்தார். இதை வைத்து நிறைய நிதியும் திரட்டப்பட்டது. ஆனால், சீமானின் அரசியல் நடவடிக்கைகள் நேர்கொண்டதாக இல்லை.