பகிரங்கமாக அறிவித்த சட்டதுறை அமைச்சர் ரகுபதி | DMK case | Regupathy minister for law
என் மேலயே 3 கேஸ் இருக்கு! திமுகவினர் மீதான வழக்குகள் இன்னும் ஒரு மாதத்தில் வாபஸ் திமுகவினர் மீது பல்வேறு காலங்களில் போடப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சியில் இருந்தும் வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை என நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தனர். புதுக்கோட்டையில் சட்டதுறை அமைச்சர் பங்கேற்றவிழாவில் முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் இது பற்றி வெளிப்படையாக பேசினார். என் மீது அரசியல் ரீதியில் வழக்கு போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. இதனால் என்னால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை. அமைச்சர் ரகுபதியிடம் இதை பலமுறை சொல்லி விட்டேன். ஆனால் வழக்கை வாபஸ் பெற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என ஆதங்கத்தை கொட்டினார் கவிதைப்பித்தன். கட்சியின் மூத்த நிர்வாகியே இப்படி வெளிப்படையாக பேசியதால் அமைச்சர் ரகுபதி அதிர்ந்து போனார். சட்டதுறை அமைச்சரான என் மேலயே மூன்று வழக்குகள் இருக்கிறது. யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என சமாதானப்படுத்தினார். வழக்குகளை வாபஸ் பெறும் பட்டியலில் கவிதைப்பித்தன் சம்பந்தப்பட்ட வழக்குகள் இடம்பெறவில்லை. போலீஸ் கொடுத்த பட்டியலில் பலரின் மீதான வழக்குகள் விடுபட்டுள்ளது.