உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சரின் கமென்ட் அதிகாரிகள் கலகல | dmk minister | Sekar babu

அமைச்சரின் கமென்ட் அதிகாரிகள் கலகல | dmk minister | Sekar babu

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் போரூரில்12.60 கோடி ரூபாய் செலவில், 16.60 ஏக்கரில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சிறுவர் பூங்கா, கூடைப்பந்து மைதானம், 6.85 ஏக்கரில் ஏரி, உடற்பயிற்சி மைதானம், 103 இருக்கைகள், கழிப்பிடம், பார்க்கிங் வசதிகள் செய்யப்படுகின்றன. இப்பணிகளை அமைச்சரும், CMDA தலைவருமான சேகர்பாபு பார்வையிட்டார். இதுவரை செய்யப்பட்ட பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதிகாரிகளுடன் பேசியபடி நடந்து வந்த அமைச்சர் சேகர்பாபு, அங்குள்ள குளத்தில் பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்த்த உடன், அதை சுட்டிக்காட்டி தாமரை வளரவே கூடாது என்று புன்முறுவலுடன் கூறினார். உடனிருந்தவர்கள் அரசியல் அர்த்தத்துடன் புரிந்து கொண்டு குபீரென சிரித்தனர். ஓரிருவர் புரியாமல் ஏன் சார் என கேட்க, வளர கூடாது தாமரை வளரவே கூடாது என அமைச்சர் திரும்ப சொல்ல அவர்களும் புரிந்து சிரித்தனர். அப்போது உடனிருந்தவர்கள், சார் அது அல்லிப்பூ என்று சொல்ல அனைவரும் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை