உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசியல் எதிரிகளை விமர்சியுங்கள்: எங்களை வம்புக்கு இழுப்பது சரியல்ல Duraimurugan speech dmk meeting

அரசியல் எதிரிகளை விமர்சியுங்கள்: எங்களை வம்புக்கு இழுப்பது சரியல்ல Duraimurugan speech dmk meeting

கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும்விதமாக, பேசினார். அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு அவர் பேசிய பேச்சு மாற்றுத்திறனாளிகளை வேதனை அடைய வைத்துள்ளது. துரைமுருகன் பேச்சுக்கு தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் மனோகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை குறிப்பிட்டு மறைமுகமாக துரைமுருகனுக்கு ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். உடல் ஊனமுற்றவர்களை நொண்டி, கூன், குருடு, செவிடு என குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி, அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றே அழைக்க உத்தரவிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது கட்சியின் பொதுச்செயலாளரே மாற்று திறனாளிகளை கொச்சையாக பேசியிருப்பதை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !