உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டாக மாறுமா கூட்டம்? பழனிசாமியின் ஹைடெக் பிளான் | Edappadi Palaniswami campaign | ADMK

ஓட்டாக மாறுமா கூட்டம்? பழனிசாமியின் ஹைடெக் பிளான் | Edappadi Palaniswami campaign | ADMK

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த ஜூலை 7ல் பிரசார பயணத்தை துவங்கினார் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய இந்த பயணம் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுக்க தொடர்கிறது. சட்டசபை தொகுதி வாரியாக, திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பேசி வருகிறார் பழனிசாமி. இதுவரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துள்ளார். கடந்த 11ம் தேதி, 50 நாள் பயணத்தை நிறைவு செய்தார்.இதுவரை, 52 நாட்களில், 153 தொகுதிகளில், 15,000 கி.மீ., பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது, ஒவ்வொரு தொகுதியிலும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் நிறுவனத்தினர் என, பல்வேறு தரப்பினருடன் பழனிசாமி கலந்துரையாடினார். மகளிர் உரிமைத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்; அனைத்து குடும்பத்தினருக்கும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு, தீபாவளிக்கு இலவச பட்டுச்சேலை, மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் என வாக்குறுதிகளை அளித்தார்; தி.மு.க., அரசையும் கடுமையாக விமர்சித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக அளவில் மக்கள் திரண்டது, அவரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, தனக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்த பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதுவரை பிரசார பயணத்தை முடித்த தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு மக்களின் ஆதரவு குறித்து, தனியார் நிறுவனம் வாயிலாக கருத்து கணிப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளார். விஜய் கட்சிக்கு மக்களிடம் உள்ள ஆதரவையும், தி.மு.க., அரசு பற்றிய மக்களின் எண்ணங்களையும், இந்த கருத்து கணிப்பில் தெரிந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். #EPSCampaign #ADMK50Days #PalaniswamiTour #TamilNaduPoll #EPSSupport #ADMKStrategy #Election2026 #TamilPolitics #EPSMeetsPeople #ADMKRevival

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை