உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரு படகு உரிமையாளரின் வருவாய் மட்டும் ரூ.30 கோடி | Family With 130 Boats Made Rs 30 Crore | Yogi

ஒரு படகு உரிமையாளரின் வருவாய் மட்டும் ரூ.30 கோடி | Family With 130 Boats Made Rs 30 Crore | Yogi

மகா கும்பமேளா வர்த்தகம் மிரளவைத்த யோகி கணக்கு எதிர்கட்சிகளுக்கு நெத்தியடி பதில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடந்தது. சுமார் 65 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர். இந்த பெரிய விழாவால் பெரும் பொருளாதார சுழற்சி நடைபெற்றது. ஆனால் மகா கும்ப மேளாவில் படகு ஓட்டுநர்கள் பாதித்ததாக சமாஜ்வாடி கட்சி விமர்சித்தது. அக்கட்சியினருக்கு பதில் அளிக்கம் வகையில் உபி சட்ட சபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது படகு ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவது பொய். 130 படகுகள் வைத்திருக்கும் ஒரு படகு உரிமையாளர் மட்டும் 45 நாளில் மொத்தம் 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறார். நாள் ஒன்றுக்கு ஒரு படகு 50 முதல் 52 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெற்றது. 45 நாளும் சேர்த்தால் ஒரு படகு தோராயமாக 23 லட்சம் ரூபாய் பணம் ஈட்டி இருக்கிறது. கும்பமேளாவுக்காக அரசு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவழித்தது. 3 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. ஹோட்டல் தொழிலில் மட்டும் தோராயமாக 40 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்தில் 1.5 லட்சம் கோடி ரூபாயும், சுங்கச் சாவடிகள் மூலம் 300 கோடி ரூபாயும் வர்த்தகம் நடந்திருக்கிறது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ