பசும்பொன்னில் மூவரணி: செங்கோட்டையன் கதி என்ன? Former CM O Panneerselvam, AMMK TTV Dhinakaran Forme
அதிமுகவில் இருந்து நீண்ட காலத்துக்கு முன்பே டிடிவி தினகரன் நீக்கப்பட்டார். அதிமுகவுக்குள் நுழைய அவர் செய்த அத்தனை முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எனும் தனிக்கட்சியை துவங்கினார். டிடிவி தினகரனை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். அதிமுகவில் இருந்து பிரிந்துசென்றவர்களை ஒன்றிணைப்பேன் என அறிவித்த செங்கோட்டையனின் கட்சிப்பதவிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். ஆனால், அவரை கட்சியை விட்டு இன்னும் நீக்கவில்லை. முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். இந்த சூழலில், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஒன்றாக பேட்டியளித்தனர். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் ஒன்றுபட்டு செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறினார். உங்கள் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு தொடரும் என ஓபிஎஸ் பதிலளித்தார். மூவரும் சட்டசபை தேர்தலில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என, தினகரன் சொன்னார். ஓபிஎஸ், தினகரன் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தனர். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் அந்த கூட்டணியை விட்டு விலகினர். அவர்களுடன் அதிகாரப்பூர்வமாக செங்கோட்டையன் கைகோர்த்துள்ள நிலையில், அவர் அதிமுகவை விட்டு நீக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. அதை எடப்பாடி பழனிசாமியின் கருத்து உறுதிப்படுத்தி இருக்கிறது. #OPanneerselvam #TTVDhinakaran #KASengottaiyan #ThevarGuruPuja #EdappadiPalanisami #TamilNaduPolitics #AMMK #PoliticalGathering #CulturalCelebration #TamilHeritage #LeadershipUnity #PujaCelebrations #TamilNaduLeaders #CommunityEvent #PoliticalAlliance