மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்: ஸ்டாலின் விமர்சனம் | Governor Ravi | Approves bill | Stalin
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் கவுன்சிலர் பதவி வழங்கும் மசோதாவை கடந்த ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். இதன்மூலம் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர். அதோடு 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கியது தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.