ஜம்மு காஷ்மீர் ஓகே; ஹரியானா ஏத்துக்கவே முடியாது | haryana election result 2024
ஓட்டு மெஷினில் தப்பு இருக்கு அழுது புலம்புகிறது காங்கிரஸ் ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ல் நடந்த தேர்தல் ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் நேரம் செல்ல செல்ல பின்தங்கி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. ஆரம்பத்தில் வெற்றி பெறுவோம் என நம்பி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். திடீரென முடிவுகள் மாறியதால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தை குறை சொல்ல ஆரம்பித்தனர். ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் சரியாக இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை என்றனர். ஹரியானா காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. புகார் கொடுத்த சில மணி நேரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு பொய்யானது என தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இருந்தும் ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஓட்டு இயத்திரத்தை குறை கூறினர். தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறினார். ஓட்டு மெஷின் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஹிசர், மகேந்திரகார்க் மற்றும் பானிபட் நகரங்களில் ஓட்டுமெஷினில் கோளாறு உள்ளதாக கட்சி வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அதில் உள்ள ஒரு பேட்டரிகள் செயல்படவில்லை என்கின்றனர்.