பாரத்போல் போர்ட்டல் மூலம் விசாரணை துரிதமாகும்: அமித்ஷா |home minister|amit shah| launches| bharatpol
பாரத்போல் போர்ட்டல் மூலம் விசாரணை துரிதமாகும்: அமித்ஷா home minister|amit shah|launches|bharatpol portal|cbi மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள சட்ட அமலாக்க ஏஜென்சிகளின் செயல் திறனை மேம்படுத்த சில முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று பாரத்போல் போர்ட்டல் BHARATPOL portal. சைபர் கிரைம், நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் முதலான நாடுகடந்த குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்க விரைவான மற்றும் திறமையான சர்வதேச உதவிகள் தேவைப்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்த போர்ட்டலை சிபிஐ CBI உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள சட்ட அமலாக்க ஏஜென்சிகள் மற்றும் மாநில போலீசார் தகவல்களை விரைவாகவும், எளிமையாகவும் பகிர்ந்துகொள்வது; சர்வதேச போலீஸ் உதவியை எளிதாக அணுகுவதற்கு உதவுவது பாரத்போலின் முக்கிய நோக்கம். பாரத்போல் போர்ட்டல் துவக்க விழா டில்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.