இந்தியாவின் நம்பர்-1 ஹைபர்சோனிக் ஏவுகணை இதுதான் | hypersonic missiles | India missile test video
எதிரிகள் இனி குலைநடுங்குவர் இந்தியா கையில் மிரட்டல் ஆயுதம் இதோட பவர் தெரியுமா? உலகில் நிலவும் போர் பதற்றங்களுக்கு ஊடே இந்தியா ஒரே வாரத்தில் 2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை இந்தியா சோதித்து இருப்பது நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் சக்தி கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணை. இதற்கு முன்பும் இந்தியா இந்த வகை ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. இருப்பினும் இப்போது சோதித்து இருப்பது தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகளிலேயே அதிக தூரம் சென்று இலக்கை தாக்கும் சக்தி கொண்டது. இது இந்தியாவை அச்சுறுத்தும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடியது. அப்படி இதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்த ஏவுகணை 1500 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சக்தி கொண்டது. நம்மிடம் 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தாக்கும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கின்றன.