நெருக்கடியை சமாளிக்க அம்பாதேவி அம்மனை வழிபடும் மோடி! India Pakistan Clash | Pahalgam Attack | MODI
பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன்! உணவு, உறக்கம் இல்லாமல் வேலை செய்யும் மோடி! ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பிரதமர் மோடி பிஸியாகி விட்டார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை இந்திய ராணுவம் நொறுக்கி தள்ளியது. இதில், 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலியாகினர். இதையடுத்து, தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்கள், முப்படை தளபதிகளுடன் கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல கூட்டங்களில் பங்கேற்று, பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்தார் மோடி. மற்றொரு பக்கம் வெளிநாட்டு தலைவர்களுடன் தினமும் பேசி வருகிறார். இதுவரை, 150க்கும் மேலான உலக தலைவர்களுடன் பேசி விட்டாராம் மோடி. பாகிஸ்தான் பயங்கரவாதிகளைத்தான் இந்தியா தாக்கியது என, உலக தலைவர்களுக்கு தெரிவித்து உள்ளார். ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்கள், இன்னொரு பக்கம் உலக தலைவர்களுடன் போனில் பேச்சு என, நாள் முழுதும் பிரதமர் பிஸியாகவே இருந்தார். இந்த காலகட்டத்தில், அவர் அதிகம் துாங்கவே இல்லை. அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் மோடி துாங்கியிருப்பார் என்கின்றனர், பிரதமருக்கு நெருக்கமானவர்கள். சாப்பாடும் அதிகம் கிடையாது. மோடி இருக்கும் இடமருகே, ஒரு ப்ளாஸ்க்கில் வெந்நீர் வைத்துவிட்டால் போதும். அதைக் குடித்தபடியே கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். அதிக பிரச்னை, நெருக்கடி என வரும்போது, குஜராத்தில் உள்ள அம்பாதேவி அம்மனை வழிபடுவதுடன், பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்துள்ளார். அதிகம் யாருடனுமே பேச மாட்டார். தனக்கு நெருக்கமாக, பல ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு மூத்த அதிகாரிகளுடன் மட்டும் மனம் விட்டு பேசுவாராம் மோடி.