உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேலை அடிக்க ஹிஸ்புல்லா எடுத்த கொடிய ஆயுதம் | Israel vs Hezbolla | Qader-1 ballistic missile

இஸ்ரேலை அடிக்க ஹிஸ்புல்லா எடுத்த கொடிய ஆயுதம் | Israel vs Hezbolla | Qader-1 ballistic missile

இஸ்ரேல், ஹிஸ்புல்லா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து திங்கட்கிழமை தீவிர தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதம் பதுக்கி வைத்திருக்கும் இடங்கள், இதர இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் சரமாரியாக குண்டு மழை பொழிகிறது. முதல் 2 நாளில் 558 பேர் கொல்லப்பட்டனர். 1800 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று விடிந்ததும் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை ஹிஸ்புல்லா தொடுத்தது. சரியாக 6:30 மணிக்கு இஸ்ரேலை நோக்கி காடர்-1 பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு தலைமை அலுவலகத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது. தங்கள் இலக்கை கடார்-1 பாலிஸ்டிக் ஏவுகணை துல்லியமாக தாக்கியது என்று ஹிஸ்புல்லா அறிவித்தது.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ