இஸ்ரேலுக்காக ஹவுதியை அடித்து ஓடவிட்ட அமெரிக்கா | Israel vs Houthi | US vs houthi | houthi attack
இஸ்ரேலை நொறுக்கி விட்டோம் குஷியில் இருந்த ஹவுதிக்கு பேரிடி தாண்டவமாடியது அமெரிக்கா ஹெஸ்புலாவுடன் தீவிரமாக நடந்து வந்த போரை நிறுத்தி விட்டு ரிலாக்ஸ் ஆகி விடலாம் என்று நினைத்த இஸ்ரேலுக்கு, ஒரு வாரத்துக்கும் மேலாக ஹவுதி பயங்கரவாதிகள் குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். ஈரான் ஆதரவுடன் எப்படி காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா பயங்கரவாதிகள் செயல்படுகின்றனரோ, அதே மாதிரி ஈரான் ஆதரவுடன் ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹெஸ்புலா போரை இஸ்ரேல் நிறுத்தியதில் இருந்து ஹவுதிகள் தீவிர தாக்குதலை துவங்கினர். இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக வியாழக்கிழமை அதிகாலையில் ஏமனுக்குள் புகுந்து ஹவுதியை பந்தாடியது இஸ்ரேல். ஒரே நேரத்தில் இஸ்ரேலின் 14 போர் விமானங்கள் 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் பறந்து சென்று சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள 3 துறைமுகங்கள், ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகளை தகர்த்தன. இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பிறகும் ஹவுதிகளின் கொட்டம் அடங்கவில்லை. நேற்று இஸ்ரேல் மீது சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர். 2500 கிலோ மீட்டருக்கு மேல் பறந்து டெல்அவிவ் நகரை துல்லியமாக தாக்கியது அந்த ஏவுகணை. இதில் 16 பேர் காயம் அடைந்தனர்.