ஈரான் தலை காக்க சீனா குதித்ததால் இஸ்ரேல் அதிர்ச்சி | Israel vs Iran | Khamenei | china laser defense
கமெனிக்கு தான் அடுத்த குறி இஸ்ரேல் குறுக்கே வந்த சீனா போர் பூமியில் புதிய பரபரப்பு லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளை குறி வைத்து 4 வாரமாக இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையின் உச்சமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதும் பல முஸ்லிம் அமைப்புகள் கொந்தளித்தன. ஈரானாலும் நஸ்ரல்லா இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டின் மீது சக்திவாய்ந்த 201 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை ஈரான் வீசியது. இந்த ஏவுகணைகள் சில இடங்களில் சேதம் ஏற்படுத்தியது. அதே நேரம் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து வானிலே அழித்து விட்டோம் என்றது இஸ்ரேல். இருப்பினும் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. ஈரானில் உள்ள அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் குறி வைப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மாதிரியான தாக்குதல் நடந்தால் ஈரானில் பேரழிவு ஏற்படும். எனவே இஸ்ரேல் இப்படிப்பட்ட எந்த தாக்குதலையும் நடத்தக்கூடாது என்று அதன் ஆதரவு நாடானா அமெரிக்கா வலியுறுத்தியது. சவுதி அரேபியா, அமீரகமும் இதையே வலியுறுத்தின. ஆனால் தங்கள் அடி ஈரானால் மறக்கவே முடியாததாக இருக்கும் என்று இஸ்ரேல் சொல்கிறது. எனவே ஈரானின் உச்ச தலைவர் கமெனியை கொலை செய்யக்கூடும் என்ற பேச்சும் உள்ளது. ஈரானுக்கு இஸ்ரேல் என்ன பதிலடி கொடுக்கப்போகிறது என்பது பற்றி உலகமே பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், சத்தமின்றி ஈரான் உச்ச தலைவருக்கு சீனா பாதுகாப்பு கொடுத்து இருப்பது இன்னும் பரபரப்பை எகிற வைத்துள்ளது.