உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க நிதியுதவி விவகாரம்; அமைச்சர் ஜெய்சங்கர் பதில் | Jaishankar | Trump | US President | USAID

அமெரிக்க நிதியுதவி விவகாரம்; அமைச்சர் ஜெய்சங்கர் பதில் | Jaishankar | Trump | US President | USAID

இந்திய தேர்தலில் அமெரிக்க நிதி? உண்மைகள் வெளியே வரும்! நல்ல நோக்கத்துக்குதான் அனுமதிக்கப்பட்டது USAID எனப்படும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு, இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் அதாவது சுமார் 182 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். யாரையோ தேர்தலில் வெற்றி பெறவைக்க நாம் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என அவர் கேட்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறார். ஆனால், டிரம்ப் இந்த விவரத்தை தவறாக சொல்வதாகவும், வங்கதேசத்துக்குதான் அப்படி நிதி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பான கேள்வி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார். அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவல் கவலை அளிக்க கூடியவை. உள்நோக்கத்துடன் அவை செயல்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அது பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. உண்மை வெளிவரும். அமெரிக்க நிதியுதவி வரலாற்று ரீதியாகவே இங்கு இருந்து வருகிறது. அது, நல்ல நோக்கத்துக்காக, நல்ல நடவடிக்கைளுக்காக அனுமதிக்கப்பட்டது. தற்போது தீய நோக்கங்களுடன் அதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. அது பற்றி நாம் ஆராய வேண்டும். அப்படி ஏதாவது நடந்திருந்தால் தீய நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை