/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எலான் செயல் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் | JD Vance | US vice president | Slams elon musk
எலான் செயல் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் | JD Vance | US vice president | Slams elon musk
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்பின் குடியரசு கட்சிக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். டிரம்ப் நிர்வாகம் தன் தொழில்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்திருந்த எலான் மஸ்க், சமீபத்தில் அரசு கொண்டு வந்த புதிய வரி சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்தார். டிரம்ப் அரசை நேரடியாக விமர்சிக்க துவங்கினார். பதிலுக்கு டிரம்பும், மஸ்க் நிறுவனத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், மானியங்களை நிறுத்துவேன் என மிரட்டினார்.
ஜூன் 08, 2025