உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீரை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் ஷகுன் பரிஹார் | Kashmir Election Result | Shagun Parihar | Kishtw

காஷ்மீரை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் ஷகுன் பரிஹார் | Kashmir Election Result | Shagun Parihar | Kishtw

அப்பாவை சிதைத்த பயங்கரவாதிகள் மகளை இறக்கி சாதித்த பாஜ ஜம்முவில் புது சரித்திரம் ஜம்மு காஷ்மீரில் பாஜ வெற்றியை பறிகொடுத்து இருந்தாலும் பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமரப்போகிறது. மொத்தமுள்ள 90 இடங்களில் அந்த கட்சி 29 சீட்டுகளை வென்று அசத்தி உள்ளது. பாஜ வென்ற இந்த 29 தொகுதிகளில் கிஷ்த்வார் Kishtwar தொகுதியும் ஒன்று. இங்கு பாஜ வெற்றி பெற்றிருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ஷகுன் பரிஹார் Shagun Parihar 521 ஓட்டு வித்தியாசத்தில், தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சஜ்ஜத் அகமது கிச்லூவை Sajjad Ahmed Kichloo தோற்கடித்தார். ஷகுன் பரிஹார் வெற்றிக்கு பின்னால் மிகப்பெரிய சோக கதை உள்ளது. கிஷ்த்வார் தொகுதியில் முஸ்லிம்களும் இந்துக்களும் வசிக்கின்றனர். இருப்பினும் முஸ்லிம்கள் தான் அதிகம். தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாகவே விளங்கியது. இங்கு பாஜ வென்ற சரித்திரமே கிடையாது. முதல் முறையாக 2014ல் பாஜ காலூன்றியது. அக்கட்சி வேட்பாளர் சுனில் குமார் சர்மா வெற்றி பெற்றார். 10 ஆண்டு கழித்து நடந்த தேர்தலில் மீண்டும் பாஜ வாகை சூடி இருக்கிறது. இப்போது வெற்றி பெற்று இருக்கும் ஷகுன் பரிஹார், ஒரு இந்து பெண். பயங்கரவாத தாக்குதலில் தனது ரத்த உறவுகளை பறிகொடுத்தவர்.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ