உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கர்நாடக ஐடி நிறுவனங்களை அழைக்கும் நாரா லோகேஷ் | Karnataka Job Quota bill | Nasscom IT companies

கர்நாடக ஐடி நிறுவனங்களை அழைக்கும் நாரா லோகேஷ் | Karnataka Job Quota bill | Nasscom IT companies

கர்நாடகா கைவிட்டா ஆந்திரா பக்கம் வாங்க ஐடி கம்பெனிகளுக்கு அழைப்பு தனியார் கம்பெனி வேலை வாய்ப்பில் கன்னட மக்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கும் சட்ட மசோதாவை கர்நாடக காங்கிரஸ் அரசு கொண்டு வருகிறது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால், பல ஐடி நிறுவனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் தாவும் நிலை ஏற்படலாம் என நாஸ்காம் Nasscom அமைப்பு கூறியது. இந்தியாவிலுள்ள சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான கூட்டமைப்பாக நாஸ்காம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து பல ஐடி நிறுவனங்கள் இடத்தை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாஸ்காம் அமைப்பில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை