உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க பாஜ, அதிமுக வலியுறுத்தல் | Kallakurichi | Annamalai | Dmk | HC

சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க பாஜ, அதிமுக வலியுறுத்தல் | Kallakurichi | Annamalai | Dmk | HC

பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: கள்ளக்குறிச்சியில் 67 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்கு பலியான வழக்கு தொடர்பாக தமிழக பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும், அதை கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், இது திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தன போக்கில் கையாண்டு, உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு இருப்பது, கோர்ட்டின் கருத்து மூலம் தெளிவாக தெரிகிறது. திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஐகோர்ட் குட்டு வைத்திருக்கிறது. 67 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து வழக்கை திமுக அரசு திசைதிருப்ப முயன்றது கண்டிக்கத்தக்கது. மேல்முறையீடு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க திமுக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி