பண்டிகைக்கு உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம் Mann ki Baat | Modi Speech | Make in India
உலகளவில் பிரபலம் ஆகும் இந்தியர்களின் கற்பனை திறன் பிரதமர் மோடி நெகிழ்ச்சி மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 114 எபிசோடுகள் முடிந்து 115வது எபிசோடில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். சுதந்திரத்திற்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி துவங்குகிறது. ஜார்கண்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்த ஆண்டு நவம்பர் 15ல் துவங்குகிறது. இந்த இரு தலைவர்களும் நாட்டின் ஒற்றுமை பற்றியே சிந்தித்து, அதற்கு செயல் வடிவம் தந்தனர். இவர்களின் 150வது ஜெயந்தி விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும்.