இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியே காங்கிரஸ் தான்: மாயாவதி தாக்கு! Mayawati | BSP Leader | Rahul
ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கனவு காண்கிறது! ராகுல் பேச்சை நம்ப கூடாது! அமெரிக்கா சென்றுள்ள ராகுல், வாஷிங்டன் நகரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவில் இன்னும் எத்தனை காலத்துக்கு இட ஒதுக்கீடு நீடிக்கும் என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார். இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் யோசிக்கும். ஆனால் இந்தியா இப்போது அப்படி இல்லை என ராகுல் கூறினார். ராகுலின் இந்த பதிலை உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்படி இருந்தும் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்தவும் முன்வரவில்லை. இப்போது இந்த பிரச்னையை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என காங்கிரஸ் கனவு காண்கிறது. காங்கிரஸ் ஒரு போதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாது.