உணவகத்தில் ஆய்வு எல்லாமே செட் அப் EPS| Palanisamy| Mk stalin| amma restarunt
சென்னையில் அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பாத்திரங்கள் வாங்கவும், கட்டங்கள் பராமரிக்கவும் 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இதெல்லாம் முதலைக்கண்ணீர் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்தார். ஏழைகளின் அன்னலட்சுமியாக இருக்கும் அம்மா உணவகங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். அவரது அறிக்கை: 2021ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் அம்மா உணவகங்களை திமுகவினர் இடித்து தள்ளினர். பணியாளர்களை 3ல் ஒரு பங்கு குறைத்தும், தேவையான நிதி ஒதுக்காமலும், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வழங்காமல் பல உணவகங்களை திமுக அரசு மூடியது. உண்மை நிலை இப்படி இருக்க, அம்மா உணவகங்களை திமுக மூடிவிடும் என புரளிகள் கிளப்பி விடுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் முதலை கண்ணீர் வடித்துள்ளார்.