உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யூனுசுக்கு மோடி எழுதிய பரபரப்பு கடிதம் india vs bangladesh | modi letter to muhammad yunus | hasina

யூனுசுக்கு மோடி எழுதிய பரபரப்பு கடிதம் india vs bangladesh | modi letter to muhammad yunus | hasina

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள் நாட்டு கலவரம் வெடித்தது. பிரதமராக இருந்த சேக் ஹசீனா அடைக்கலம் கேட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்கதேசத்தை வழிநடத்த இடைக்கால அரசை அதிபர் கொண்டு வந்தார். அதன் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுசை நியமித்தார். யூனுஸ் வந்த பிறகு வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடப்பது அதிகரித்தது. அவர் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்ததால், இந்தியாவுடனான உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இந்த நிலையில் தான் வங்கதேசத்தின் தேசிய நாளையொட்டி அந்நாட்டின் தலைவர் யூனுசுக்கு பிரதமர் மோடி பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது: வங்கதேசத்தின் தேசிய தினத்தையொட்டி உங்களுக்கும் வங்கதேச மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் தான் இந்தியா, வங்கதேசம் உறவுக்கு அடித்தளமிட்டது. இரு நாடுகளும் செய்த தியாகங்களுக்கு சான்றாக நிற்பதும் இந்த நாள் தான். வங்கதேச விடுதலை போரின் போது இரு நாடுகளிடமும் ஏற்பட்ட உணர்வு, இன்னும் நம் உறவுக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்து வருகிறது. இந்த உறவால் இந்தியர்களும் வங்கதேச மக்களும் மிகப்பெரிய பலனை அறுவடை செய்து வருகின்றனர். அமைதி, வளர்ச்சி, நாட்டின் ஸ்திரத்தன்மை தொடரவும், இந்தியா, வங்கதேசம் இடையேயான பரஸ்பர நலன்கள், கவலைகளில் ஒருமித்து பயணிக்கவும் இந்தியா உறுதி எடுத்துள்ளது என்று பிரதமர் கூறி உள்ளார். அதே போல் நம் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் வங்கதேசம் அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா, வங்கதேசம் இடையேயான உறவு பன்முகத்தன்மை கொண்டது. வர்த்தகம், மின்சாரம், எரிசக்தி, கல்வி, திறன் வளர்ச்சி, கலாச்சாரம் உட்பட பல துறைகளில் வங்கதேசத்துடன் இந்திய ஒத்துழைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா தொடர்ந்து வங்கதேசத்துக்கு ஆதரவு அளிக்கும் என்று ஜனாதிபதி உறுதி அளித்தார். பிரதமர், ஜனாதிபதியின் இந்த வாழ்த்து செய்தி மூலம் வங்கதேச உறவில் விழுந்த விரிசலை சரி செய்ய இந்தியா ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதை யூனுஸ் சரியாக பயன்படுத்திக்கொண்டால் இரு நாட்டுக்கும் நல்லது என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை