வருங்கால துணை முதல்வர் ஆன நயினார் நாகேந்திரன் | modi tn visit | bjp vs admk | nainar nagendran bjp
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதையொட்டி, அவரை வரவேற்பது தொடர்பான பாஜ மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அங்கு நடந்தது. கூட்டத்துக்கு வந்தவர்களை வரவேற்று பேசிய அரியலூர் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, நயினார் நாகேந்திரன் பெயரை சொல்லும் போது பரபரப்பு ஏற்பட்டது. ‛எம்மா வருங்கால துணை முதல்வர்னு சொல்லும்மா என்று சில நிர்வாகிகள் சத்தம் போட, பரமேஸ்வரியும் அதையே சொன்னார். இதனால் ஒரு கணம் அதிர்ந்து போனார் நாகேந்திரன். ஏற்கனவே கூட்டணி ஆட்சி விவகாரம் அதிமுக, பாஜ கூட்டணியில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், வீண் சர்ச்சை வராமல் இருக்க பெண் நிர்வாகிக்கு அவர் அட்வைஸ் செய்தார். பின்னர் மோடி வருகை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.