உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாய்விட்ட பாஜ அமைச்சர்; ஐகோர்ட் கடும் கண்டனம் | MP minister vijay shah|Colonel Sofiya Qureshi| FIR

வாய்விட்ட பாஜ அமைச்சர்; ஐகோர்ட் கடும் கண்டனம் | MP minister vijay shah|Colonel Sofiya Qureshi| FIR

காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீர் பயங்கரவாதிகள் 26 இந்து ஆண்களை சுட்டு கொன்றதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. தாக்குதல் நடத்தப்பட்ட விதம், அழிக்கப்பட்ட பயங்கரவாதிகள் முகாம் பற்றிய விவரங்களை வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிக சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, பெண்கள் தலைமையிலான குழுவை வைத்தே பதிலடி கொடுத்ததாக மத்திய அரசு தெரிவித்தது. இச்சூழலில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய பிரதேசத்தின் பழங்குடி விவகார அமைச்சர் விஜய் ஷா, ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரோஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என குறிப்பிட்டார்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ