உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் மருந்தகங்களில் கேட்ட மருந்து கிடைக்காமல் மக்கள் அவதி! Muthalvar Marunthagam | DMK | PM Modi

முதல்வர் மருந்தகங்களில் கேட்ட மருந்து கிடைக்காமல் மக்கள் அவதி! Muthalvar Marunthagam | DMK | PM Modi

முதல்வர் மருந்தகம் எதுக்கு திறந்தாங்கனே தெரியல! எந்த மருந்தும் கிடைக்கல! இந்திய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதம மந்திரி மக்கள் மருந்தகம், 2008ல் துவக்கப்பட்டது. 2014 வரை நாடு முழுதும் மொத்தம் 80 மருந்தகங்கள் மட்டுமே துவக்கப்பட்ட நிலையில், 2015ல் பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தார். தற்போது கோவையில் மட்டும் 1,195 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இதில் 35 சதவீத மருந்தகங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. அங்கு 2,500க்கும் மேற்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு மக்கள் மருந்தகங்களில், 25 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கிறது. ஒரு மருந்தகத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது, 50 பேர் பயனடைகின்றனர். மத்திய அரசு பாணியில், தமிழக அரசு சார்பிலும் மலிவு விலையில் மருந்து விற்க முடிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி 1,000 இடங்களில், முதல்வர் மருந்தகங்களை ஸ்டாலின் திறந்தார். இவை கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டன. அதேநேரம் இந்த முதல்வர் மருந்தகங்களுக்கு முழு அளவில் மருந்துகள் சப்ளை இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பத்து மருந்துகள் கேட்டால், இரண்டு மட்டுமே கிடைக்கிறது. பிற வகை மருந்துகளுக்கு தனியார் மருந்தகங்களை நாட வேண்டியுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். பல இடங்களில் ஒரு கிலோ மீட்டருக்குள் அடுத்தடுத்து முதல்வர் மருந்தகம் செயல்படுவதால் விற்பனை ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக மருந்தக உரிமையாளர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள், மருந்தியல் அமைச்சகத்தால் துவங்கப்பட்டன. மருந்து கொள்முதல், வினியோகம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை ஒருங்கிணைந்த இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம் மேற்கொள்கிறது. இதுபோன்ற கட்டமைப்பு தமிழகத்தில் இல்லை. அவசர கோலத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொள்முதல் செய்யுமிடத்தில் மருந்துகளை கையாளும் பார்மசிஸ்ட்டுகளும் இல்லை. மக்கள் மருந்தகங்களில் தேவை கருதி, 20 சதவீதம் வரை வெளியே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வசதி உள்ளது. முதல்வர் மருந்தகங்களில் அதுபோல வாங்கி விற்க முடியாது. மாவட்ட கிடங்குகளில் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படும் என அறிவித்தும், தேவையான மருந்துகள் இல்லை. முதல்வர் மருந்தகங்கள் நடத்துவோர் சார்பில், மதுரையில் இரு நாட்களுக்கு முன் நடந்த ஆய்வு கூட்டத்தில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை நடந்த அதிகபட்ச விற்பனையே, 30 ஆயிரம் ரூபாய் தான் என தெரிய வந்துள்ளது. தள்ளுபடி 25 சதவீதம் உள்ளதால் மக்கள் பயன்பெறும் இம்மருந்தகங்களில் தேவையான மருந்து கிடைக்கும் வகையில் தமிழக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை