தற்காப்பு கலையில் மாஸ் காட்டும் ராகுல் ; வீடியோ வைரல் | National Sports Day | Rahul | Gentle Art |
ஒரே அடியில் பறந்த மாஸ்டர் ராகுலுக்கு இவ்வளவு பலமா! தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. விளையாட்டு தினத்துக்கு வாழ்த்து கூறியுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது ஜோடோ யாத்திரையின் போது செய்த தற்காப்பு கலை வீடியோவை ஷேர் செய்துள்ளார். சுழன்று, பறந்து, பல்டி அடித்து அவர் செய்யும் ஆக்சன்களை காங்கிரஸ் கட்சியினர் ஷேர் செய்து வருகின்றனர். யாத்திரையின் போது எங்கள் முகாமில் தினமும் மாலை இந்த பயிற்சி செய்வது வழக்கம். ஜியு - ஜிட்சு என்ற தற்காப்பு கலையை பல சிறு வயதினருக்கும் சொல்லி கொடுத்தோம். வன்முறையை மென்மையாக மாற்ற இளம் தலைமுறையினருக்கு இதை அறிமுகப்படுத்துவதே எங்களின் நோக்கம். விரைவில் பாரத் டோஜோ யாத்திரை வருகிறது எனவும் ராகுல் கூறியுள்ளார். டோஜோ என்பது தற்காப்பு கலைக்கான பயிற்சிக்கூடம் என அர்த்தம். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட மற்றும் இந்தியாவுக்காக விளையாடியவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் தருணமிது.